| வளைக்கைப்பொழி மழைகூர்தர | | மயில்மான்பிணை நிலத்தைக் | | கிளைக்கமணி சிந்துந்திருக் | | கேதாரமெ னீரே. | | 8 |
800. | பொதியேசுமந் துழல்வீர்பொதி | | அவமாவதும் அறியீர் | | மதிமாந்திய வழியேசென்று | | குழிவீழ்வதும் வினையால் | | கதிசூழ்கடல் இலங்கைக்கிறை | | மலங்கவ்வரை யடர்த்துக் | | கெதிபேறுசெய் திருந்தானிடங் | | கேதாரமெ னீரே. | | 9 |
சுனைகளின் நீரைத் தெளித்தலால், அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக, மயிலும், பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். கு-ரை: "சொல்லி" என்றது, பான்மை வழக்கு. மூங்கில் இலைகள் யானைக்கு உணவாதல் அறிக. "தூவி" என்றது, 'தூவ' என்பதன் திரிபு. 'மயிலும் மான்பிணையும் நிலத்தைக் கிளைக்கும்' என்றது, கோழியும், எருதும் ஆண்டு இல்லை என்பதை விளக்கி நின்றது. 9. பொ-ரை: உலகீர், நீவிர், இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர்; அப்பொதிதான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர்; அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும், நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும் படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு நன்னிலையைப் பெறச்செய்து தான் அம்மலைமேல் இனிதிருந்தவனாகிய சிவ பெருமானது இடம் திருக்கேதாரமே; அதனைத் துதிமின்கள். கு-ரை: "வினையால்" என்றதில் ஆல், அசைநிலை. கதி - இடம். "கேதாரம்" என்றதனை இரட்டுற மொழிந்து கொள்க.
|