801. | நாவின்மிசை யரையன்னொடு | | தமிழ்ஞானசம் பந்தன் | | யாவர்சிவ னடியார்களுக் | | கடியானடித் தொண்டன் | | தேவன்திருக் கேதாரத்தை | | ஊரன்னுரை செய்த | | பாவின்றமிழ் வல்லார்பர | | லோகத்திருப் பாரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், மற்றும் எவராயினும், சிவனடியார்களுக்கு அடியனாகி, அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன், இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய, இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள், எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவலோகத்தில் இருப்பவராவர். கு-ரை: "மிசை" ஏழனுருபு; அஃது உருபு மயக்கமாய், நான்காவதன் பொருளைத் தந்தது. "தமிழ்" என்றது தாப்பிசையாய், முன்னுஞ் சென்றியையும். "யாவர்" என்றதன்பின், 'ஆயினும்' என்பது வருவிக்க. "அடியான்" என்றது முற்றெச்சமாய், "அடித்தொண்டன்" என்னும் வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது. 'பாவாகிய இனிய தமிழ்' என்க. அன்றி, 'இன், சாரியை' எனினுமாம். திருநெல்வேலிப் புராணம் | கடிகமழ் கொன்றையம் கண்ணி வேய்ந்துவெண் | பொடியணி மேனியன் புகழைப் பாடவே | படிமிசை நாவலம் பதியில் வந்தவர் | அடியிணை சிரமிசை அணிந்து போற்றுவாம். | - நெல்லையப்பப்பிள்ளை |
|