818. | ஊனத்துறு நோய்கள்ளடி | | யார்மேலொழித் தருளி | | வானத்துறு மலியுங்கடல் | | மாதோட்டநன் னகரில் | | பானத்துறு மொழியாளொடு | | பாலாவியின் கரைமேல் | | ஏனத்தெயி றணிந்தான்திருக் | | கேதீச்சரத் தானே. | | 7 |
819. | அட்டன்னழ காகவ்வரை | | தன்மேலர வார்த்து | | மட்டுண்டுவண் டாலும்பொழில் | | மாதோட்டநன் னகரில் |
யாற்றின் கரைமேல், சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப்படுகின்றான். கு-ரை: "ஒழித்தருளி" என்ற வினையெச்சம், 'சடைமுடியான்' என்னும் வினைக்குறிப்பிற்கு அடையாய் நின்றது. "மலிகின்ற" என்ற பெயரெச்சம், "நகர்" என்ற ஏதுப் பெயர்கொண்டது. "பை", ஆகுபெயர். 7. பொ-ரை: திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியார்கள் மேலனவாய், உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று, அலைகளால் வானத்தைப் பொருந்துகின்ற, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந்தவனாய்க் காணப்படுகின்றான். கு-ரை: உடம்பினைக் குறிக்க வந்த, 'ஊன்' என்பது, அத்துப் பெற்றது. 'அலைகளால்' என்பதும், 'நீர்' என்பதும் ஆற்றலால் வந்தன. "வானத்து" என்றதனை, 'வால் நத்து' எனப்பிரித்து, 'வெள்ளிய சங்குகள் பொருந்திய' என்று உரைத்தலும் ஆம். 8. பொ-ரை: அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய. திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில்
|