பக்கம் எண் :

1119
 
816.அங்கத்துறு நோய்கள்ளடி

யார்மேலொழித் தருளி

வங்கம்மலி கின்றகடல்

மாதோட்டநன் னகரில்

பங்கஞ்செய்த மடவாளொடு

பாலாவியின் கரைமேல்

தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்

கேதீச்சரத் தானே.

5

817.வெய்யவினை யாயவ்வடி

யார்மேலொழித் தருளி

வையம்மலி கின்றகடல்

மாதோட்டநன் னகரில்

பையேரிடை மடவாளொடு

பாலாவியின் கரைமேல்

செய்யசடை முடியான்திருக்

கேதீச்சரத் தானே.

6



5. பொ-ரை: தன் அடியார்கள் மேலனவாய், அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான், மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன், பாலாவி யாற்றின் கரைமேல், தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனாய்க் காணப்படுகின்றான்.

கு-ரை: "அடியார்மேல் அங்கத்துறு" என்றதனை, 'மாடத்தின் கண் நிலாமுற்றத்திருந்தான்' என்பதுபோலக் கொள்க. உயிரின்கண் உறும் நோயை ஒழித்தலையன்றி, 'ஈண்டு, உடற்கண் உறும் நோயை ஒழித்தலை விதந்தோதியருளினார்' என்க. ஒற்றுமை பற்றி, உடல், உயிர்க்கு உறுப்பாய் நிற்குமாறு உணர்க. "அருளி" என்றது பெயர்.

6. பொ-ரை: திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளனவற்றை முற்ற ஒழித்துநின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற, கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நகரத்தில், பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி