பக்கம் எண் :

1118
 

பங்கஞ்செய்த பிறைசூடினன்

பாலாவியின் கரைமேல்

செங்கண்ணர வசைத்தான்திருக்

கேதீச்சரத் தானே.

3

815.கரியகறைக் கண்டன்நல

கண்மேல்ஒரு கண்ணான்

வரியசிறை வண்டியாழ்செயும்

மாதோட்டநன் னகருள்

பரியதிரை யெறியாவரு

பாலாவியின் கரைமேல்

தெரியும்மறை வல்லான்திருக்

கேதீச்சரத் தானே.

4



அந்தணர்களும், தேவர்களும் வணங்கித் துதிக்க, மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல், சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான்.

கு-ரை: 'பங்கு' என்பது, 'பங்கம்' என வந்தது. இனி, 'பங்கம் - குறை' எனலுமாம்.

4. பொ-ரை: கருமையாகிய, நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணையுடையவனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவியாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான்.

கு-ரை: ஞாயிறும், திங்களும் உலகினைப் புரப்பனவாகலின், அவைகட்கு அமைந்த கண்களை, "நல்ல கண்" என்றும் அருளினார். தீக்கு அமைந்த நெற்றிக்கண், உலகினை அழிப்பதாதல் அறிக. 'மேலும்' என்னும் சிறப்பும்மை, தொகுத்தலாயிற்று. "யாழ்" ஆகுபெயர்.