813. | சுடுவார்பொடி நீறுந்நல | | துண்டப்பிறை கீளும் | | கடமார்களி யானையுரி | | யணிந்தகறைக் கண்டன் | | படவேரிடை மடவாளொடு | | பாலாவியின் கரைமேல் | | திடமாஉறை கின்றான்திருக் | | கேதீச்சரத் தானே. | | 2 |
814. | அங்கம்மொழி யன்னாரவர் | | அமரர்தொழு தேத்த | | வங்கம்மலி கின்றகடல் | | மாதோட்டநன் னகரில் |
"மணவாளன்" என்றதன் இறுதிநிலையொடு முடிந்தது. 'மழுவாளன் என்பதும் பாடம். 'பற்று' என்பது, எதுகை நோக்கி, 'பத்து' எனத் திரிந்து நின்றது. 'அணிவான்' என்பது, 'அணிபவனாகின்றான்' என ஆக்க வினைக்குறிப்பாயிற்று. நிகழ்காலம், முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையைக் குறித்தது. வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே கொள்க. 2. பொ-ரை: சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், மதம் நிறைந்த மயக்கத்தையுடைய, யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், பாலாவி யாற்றின் கரைமேல், பாம்பு போலும் இடையினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான். கு-ரை: 'பிறை, உரி' என்றவற்றின் பின்னும் எண்ணும்மை விரிக்க. "படம்", ஆகுபெயர். இடைக்கு, பாம்பையும் உவமை கூறுதல் மரபாதல் அறிக. 3. பொ-ரை: பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய
|