பக்கம் எண் :

1116
 

80. திருக்கேதீச்சரம்

பதிக வரலாறு:

சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனாருடன் திருவிராமேச்சுரத் திறைவரைப் பணிந்து, திருக்கேதீச்சரப் பெருமானைச் சேய்மையிலிருந்தே தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 கழறிற். புரா. 109)

குறிப்பு: இத் திருப்பதிகம். இத்தலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற சிறப்பினை எடுத்து அருளிச்செய்தது.

பண்: நட்டபாடை

பதிக எண்: 80

திருச்சிற்றம்பலம்

812.நத்தார்படை ஞானன்பசு

வேறிந்நனை கவுள்வாய்

மத்தம்மத யானையுரி

போர்த்தமண வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு

பாலாவியின் கரைமேல்

செத்தாரெலும் பணிவான்திருக்

கேதீச்சரத் தானே.

1



1. பொ-ரை: விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும், இடபத்தை ஏறுகின்றவனும், நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய பெருமான், அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான்.

கு-ரை: "நத்தார் படை" என்றதனை, 'நத்தார் புடை' என ஓதி, 'சங்கினை ஏந்திய திருமாலை ஒரு பாகத்தில் உடைய' என்று உரைப்பாரும் உளர். 'நனைய' என்பதன் இறுதிநிலை எஞ்சி நின்றது, "செய்தக்க" என்றாற் போல (குறள் - 466.) "போர்த்த" என்ற பெயரெச்சம்,