811. | நல்லாரவர் பலர்வாழ்தரு | | வயல்நாவல வூரன் | | செல்லலுற வரியசிவன் | | சீபர்ப்பத மலையை | | அல்லலவை தீரச்சொன | | தமிழ்மாலைகள் வல்லார் | | ஒல்லைசெல வுயர்வானகம் | | ஆண்டங்கிருப் பாரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: 'மணி சிதர்த்தி' என்பதும், 'தீயென்றவை' என்பதும் பாடம் அல்ல. "ஏனல்லவை" என்றதில் லகர ஒற்று, விரித்தல். அவை - கூட்டம். 'இற்று இரியும்' எனப் பிரிக்க, இறுதல், இங்கு விடுதல். பன்றிகள் நிலத்தைக் கிளைத்ததனால் வெளிப்பட்ட மணியைத் தீயென்று அஞ்சித் தினையை உண்ணாது நீங்கியன பலவும் பின் தேனை உண்டன; பன்றிகள் அது மாட்டாது நின்றன என்க. 10. பொ-ரை: துன்பம் உறுதல் இல்லாத சிவபெருமானது திருப்பருப்பத மலையை, நல்லவர் பலர் வாழ்வதும், வயல்களையுடையதுமான திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், யாவரது துன்பமும் தீருமாறு பாடிய இத்தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள், சிறிது காலம் செல்லும் அளவிலே உயர்ந்த விண்ணுலகத்தை ஆண்டு அங்கு இருப்பர். கு-ரை: "நாவல்" என்ற அகரம் சாரியை. இன்பமே வடிவமானவன் என்பதனை, "செல்லல் உற அரிய" என்று அருளினார். உயர் வானகம் - சிவலோகம்.
|