| பட்டவ்வரி நுதலாளொடு | | பாலாவியின் கரைமேல் | | சிட்டன்நமை யாள்வான்திருக் | | கேதீச்சரத் தானே. | | 8 |
820. | மூவரென இருவரென | | முக்கண்ணுடை மூர்த்தி | | மாவின்கனி தூங்கும்பொழில் | | மாதோட்டநன் னகரில் | | பாவம்வினை யறுப்பார்பயில் | | பாலாவியின் கரைமேல் | | தேவன்எனை ஆள்வான்திருக் | | கேதீச்சரத் தானே. | | 9 |
பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கின்ற சோலைகளையுடைய 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் காணப்படுகின்றான். கு-ரை: "அரைதன்மேல்" என்றதில் தன், சாரியை. 9. பொ-ரை: மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், மூவராகியும், இருவராகியும், முதற்கடவுளாகியும் நின்று, என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான். கு-ரை: 'தாழ' என்பது, இசையெச்சம். தாழத் தூங்குதல், பெரிதாய், நிரம்ப இருத்தலின் என்க. பாவத்தை அறுக்க விரும்புவோர் உலகரும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் அருளாளருமாவர். "தேவன்" என்றதன் பின்னும், 'என' என்பது விரிக்க. "எனை ஆள்வான்" என்றது, 'உயிர்களை ஆட்கொள்பவன்' என்னும் திருவுள்ளத்தது. எனவே, "மூவரென" என்றது முதலிய மூன்றும், இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையை அருளியவாறாம்.
|