836. | உற்றான்நமக் குயரும்மதிச் | | சடையான்புலன் ஐந்தும் | | செற்றார்திரு மேனிப்பெரு | | மான்ஊர்திருச் சுழியல் | | பெற்றான்இனி துறையத்திறம் | | பாமைத்திரு நாமம் | | கற்றாரவர் கதியுட்செல்வர் | | ஏத்தும்மது கடனே. | | 5 |
பொருந்தாதவராவர்; இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வானுலகத்திற்கும் மேற்செல்வார்கள். கு-ரை: 'ஆகம் இடத்தவள்' என மாற்றி, ஆக்கம் வருவித்து உரைக்க. "மற்று" அசைநிலை. "புகழால்" என்புழி ஆல் உருபு, ஒடு உருபின் பொருளில் வந்தது. "புகழ்" ஆகுபெயர். வானம் - தேவர் உலகு. வீட்டுலகம், "வானோர்க்கு உயர்ந்த உலகம்" (குறள் - 346) எனப்படுதல் காண்க. 5. பொ-ரை: நமக்கு உறவாயுள்ளவனும், மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும், ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே. அதன்கண் நீங்காது இனிது எழுந்தருளியிருக்கப்பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர், உயர்கதியிற் செல்வர்; ஆதலின் உலகீர், அவனது திருப்பெயரைப் போற்றுமின்; அதுவே உங்கட்குக் கடமையாவது. கு-ரை: சந்திரனுக்கு மேன்மை, மறுவின்றி நிற்றல், எனவே, பிறை என்றதாயிற்று. 'மாயையில் தோன்றிய உடம்பன்று, அருட்டிரு மேனி' என்பார், 'புலன் ஐந்தும் செற்று ஆர் திருமேனி' என்று அருளிச் செய்தார். சிவபிரானது திருமேனியை, 'பிறவா யாக்கை' (சிலப்பதிகாரம். இந்திரவிழா அடி. 169) எனப் பிறருங் குறித்தல் அறியத்தக்கது. "சுழியல்" என்றதன்பின், 'அதன்கண்' என்று எடுத்துக்கொண்டு, 'திறம்பாமை இனிது உறையப் பெற்றான்' என மாற்றியுரைக்க. "உறைய" என்ற செயவெனெச்சம் தொழிற் பெயர்ப் பொருளையும், 'பெற்றான்' என்றது, 'உடையான்' என்னும் பொருளையும் தந்தன. "ஏத்தும்" என்றது, 'ஏத்துமின்' என்பதன் மரூஉ. இவ்வாறன்றி, 'செய்யும்' என்னும் வாய்பாட்டு வினைச்சொல், ஏவற் பன்மைப் பொருளைத் தருதல் பிற்கால வழக்கு என்பர் பலர்.
|