834. | கவ்வைக்கடல் கதறிக்கொணர் | | முத்தங்கரைக் கேற்றக் | | கொவ்வைத்துவர் வாயார்குடைந் | | தாடுந்திருச் சுழியல் | | தெய்வத்தினை வழிபாடுசெய் | | தெழுவார்அடி தொழுவார் | | அவ்வத்திசைக் கரசாகுவர் | | அலராள் பிரியாளே. | | 3 |
835. | மலையான்மகள் மடமாதிட | | மாகத்தவண் மற்றுக் | | கொலையானையின் உரிபோர்த்தஎம் | | பெருமான்திருச் சுழியல் | | அலையார்சடை யுடையான்அடி | | தொழுவார்பழு துள்ளம் | | நிலையார்திகழ் புகழால்நெடு | | வானத்துயர் வாரே. | | 4 |
3. பொ-ரை: ஓசையையுடைய கடல், முழக்கம்செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள். கு-ரை: 'திருச்சுழியலில் சென்று வணங்காது, சென்று வணங்கி வருவோரை வணங்கினும் நலம் பயக்கும்' என்றபடி. இதனானே, அடியாரது பெருமையும் உணர்த்தியவாறாயிற்று. "கரைக்கு" என்றது உருபு மயக்கம். சிவபிரானை, 'தெய்வம்' என்றல் பிறர்கோள் பற்றியாம். 4. பொ-ரை: மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக, கொலைத் தொழிலையுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய, திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள், மனத்தில் குற்றம்
|