பக்கம் எண் :

1136
 
தெய்வத்தவர் தொழுதேத்திய

குழகன்திருச் சுழியல்

மெய்வைத்தடி நினைவார்வினை

தீர்தல்லெளி தன்றே.

7

839.பூவேந்திய பீடத்தவன்

றானும்மடல் அரியும்

கோவேந்திய வினயத்தொடு

குறுகப்புக லறியார்

சேவேந்திய கொடியானவன்

உறையுந்திருச் சுழியல்

மாவேந்திய கரத்தான்எம

சிரத்தான்றன தடியே.

8


இடிபோலும் குரலையுடைய இடபத்தை யுடையவனும், கையின்கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைபவரது வினைகள் நீங்குதல் எளிது.

கு-ரை: சைவம் - சிவாகமம். "உருவன்" முற்றெச்சம். "உருமேறு" உவமத் தொகை. 'கைவைத்த' என்பதன் ஈற்று அகரம,் தொகுத்தல். 'தெய்வ தவர்' எனப் பிரிக்க. 'தெய்வத்தவர்' என ஒரு சொல்லாகக் கொண்டு, 'தேவர்' என உரைத்தலுமாம். மெய் - உடம்பு; அஃது அதனுள் இருக்கும் நெஞ்சிற்கு ஆகுபெயராயிற்று. நெஞ்சு உடம்பினுள் உளதாகக் கூறப்படுதலை, 'நெஞ்சந்தன்னுள் நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற - கற்பகமே', 'ஊனின் உள்ளமே' (தி. 6 ப. 95 பா. 4, ப. 47 பா. 1) என்றாற் போல்வன பற்றியுணர்க. இனி, 'மெய்யாக உணர்ந்து' என்றலுமாம். "அன்றே" அசைநிலை.

8. பொ-ரை: எருதினை, ஏந்துகின்ற கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில், மானை ஏந்திய கையை யுடையவனும், எங்கள் தலைகளின்மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை, தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச்சென்று அடைதலை, மலராகிய, உயர்ந்த இருக்கையில் உள்ளவனாகிய பிரமனும், வலிமையுடைய திருமாலும் ஆகிய