| 840. | கொண்டாடுதல் புரியாவரு |   | தக்கன்பெரு வேள்வி  |   | செண்டாடுதல் புரிந்தான்திருச் |   | சுழியற்பெரு மானைக்  |   | குண்டாடிய சமணாதர்கள் |   | குடைச்சாக்கியர் அறியா  |   | மிண்டாடிய அதுசெய்தது |   | வானால்வரு விதியே.  |   | 9  |  
 
 இவர்தாமும் அறியமாட்டார். கு-ரை:  'ஆதலின், அது வல்லேமாகிய யாம் தவமுடையேம்' என்றவாறு. 'அம் மாவேந்திய கரத்தான் எம சிரத்தான்' எனச் சுட்டு வருவித்து உரைக்க. தம்போலும் அடியவர் பலரையும் உளப்படுத்து, "எம சிரத்தான்" என்று அருளினார். தலைமை - தலையாயதாந் தன்மை. 9. பொ-ரை:  தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்துநின்ற தக்கனது பெருவேள்வியை, பந்தாடுதல்போலத் தகர்த்து வீசி விளையாடினவனாகிய திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மூர்க்கத்தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும், குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல், வலிமை பொருந்திய வாதுசெய்து, அதன் வண்ணமே யாவார்களாயின், அஃது அவர் வினைப்பயனேயாகும். கு-ரை:  கொண்டாடியது, தன்னையே என்க. சாக்கியரை, 'குடை உடையவர்' என்றது, சமணர் வெயிலில் நிற்றலும், சுடுபாறைமேற் கிடத்தலும் செய்வர் என்பதை விளக்கிற்று. 'அது' என்றது, வாதத்தை. விதி - அறநெறி. அஃது ஆகுபெயராய், அதனால் வரும் வினையைக் குறிக்கும். ஈண்டு, வினையின் பயனை, 'வினை' என்றருளினார் என்க. 'வரு மதியே' என்பதும் பாடம். 
 |