849. | ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப் பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன் சேறணி தண்கழனித் தென்திரு வாரூர்புக் கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. | | 8 |
850. | மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும் திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. | | 9 |
மாட்டாதார் கருத்துப் பற்றியாம்.அவர் அங்ஙனங் கருதுதலை. தேவரின் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்ற தோரார்; முதலுருப் பாதி மாதர் ஆவதும் உணரார்; ஆதி அரியயற் கரிய ஒண்ணா மேவரு நிலையும் ஓரார்; அவனுரு விளைவும் ஓரார். - சிவஞானசித்தி. சூ. 1.49 என்பதனான் அறிக. 'ஒப்பமராச் செம்பொனை' என்னும் பாடம் சிறவாமை யறிக. 8. பொ-ரை: கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின்மேல், பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும், நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெருமானை, சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ! கு-ரை: 'சூடி, கொள்' என்பவற்றிற்குக் கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது. 'நச்சரவு, மேனியில் உள்ளனவாதலின்' அதனை ஓதியது மிகையாகாமை யறிக. 9. பொ-ரை: மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும், சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை, இறைவியோடும் மறவாது நினைக்குமாறும் கண்டு கண் குளிருமாறும், திண்ணிய, பெரிய மதில் சூழ்ந்த, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது
|