பக்கம் எண் :

1143
 

பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும், நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!

கு-ரை: வம்பு - வாசனை "நீறணிந்த வம்பனை" என்றாரேனும், 'நீற்று வம்பு அணிந்தவனை" என்றலே திருவுள்ளம் என்க.

மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை

மணவாள ராகி மகிழ்வர்;

தலைகல னாக உண்டு தனியே திரிந்து

தவவாண ராகி முயல்வர்;

விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி

விளையாடும் வேட விகிர்தர்;

அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த

அழல்நஞ்சம் உண்ட அவரே.

(தி. 4 ப. 8 பா. 9)

பாந்தள்பூ ணாரம்; பரிகலங் கபாலம்;

பட்டவர்த் தனம்எருது; அன்பர்

வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை;

மலைமகள் மகிழ்பெருந் தேவி;

சாந்தமே திருநீறு; அருமறை கீதம்;

சடைமுடி; சாட்டியக் குடியார்

ஏந்தெழி லிதயம் கோயில்; மாளிகைஏழ்

இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.

(தி. 9 ப. 15 பா. 2)

"தவளச் - சாம்பலம் பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன்"

(தி. 11 ப. 11 பா. 10)

எனப் பலவிடத்தும் இறைவற்குத் திருநீறு நறுமணப் பூச்சாக அருளிச் செய்யப்படுதல் காண்க. தேவர்களைச் சிவனோடு ஒப்புமை உடையவர்களாக அருளியது அவனைப் பொது நீக்கியுணர