847. | சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம் வாழுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக் கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. | | 6 |
848. | கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர் செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக் கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே. | | 7 |
கு-ரை: 'நஞ்சு போலும் நிறம்' சூரபன்மனுடையது. 'முன் அணிந்தவன்' என்னாது. 'முன் காய்ந்தவன்' என, முன்னர் இயைத் துரைப்பினுமாம். "அடு புலி", அடையடுத்த ஆகுபெயர். 6. பொ-ரை: பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும், தாழ வீழும் நீரும், ஒளியையுடைய தீயும், யாண்டும் இயங்கும் காற்றும், உயர்ந்துள்ள ஆகாயமும், வெவ்விய கதிர்களை யுடையோனாகி பகலவனும், வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம்பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும், ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ! கு-ரை: 'சூழ், ஒளி, தாழ், வாழ், உயர்' என்னும் அடைமொழிகள், கொண்டு கூட்டுவகையான் நில முதலிய ஐந்தனோடும் ஏற்ற பெற்றியின் இயைத்துரைக்குமாறு அருளிச் செய்யப்பட்டன. இஃது அறியாமையின், "வாழுயர்" என்பதனை, 'வானுயர்' எனப் பாடம் ஓதினார்; அது பாடம் ஆகாமை சொல்லவேண்டா. குரல் முதலிய ஏழிசைகளும், இசைத் தமிழ் வல்லார் வரையறுத்த வரையறையினவாகலானும், யாழின் நரம்புகள் அவ்வரையறையின் வண்ணமே அமைந்து நின்று அன்ன ஓசையைத் தருமாகலானும், "வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ் நரம்பின் ஓசை" என்று அருளினார், இனி, "ஏழிசை" என்றது, ஆகுபெயரான். அதனையுடைய பாடலைக் குறித்தது எனினுமாம். 7. பொ-ரை: இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினையுடைய உமையது கூற்றினை யுடையவனும், திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும், எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல்
|