845. | நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆரூயிரைக் கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச் செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக் கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. | | 4 |
846. | கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன் சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய் அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக் கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே. | | 5 |
உளதாவது துன்பமாயிற்று. இனி, "முன்னை முதற் பிறவி" முதலாக அருளியவை, சுவாமிகள், தமக்குக் கயிலையில் நிகழ்ந்தவற்றை நினைந்து அருளியது என்றலுமாம். "செந்நெல் வயற்கழனி" என்றதனை, "இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்" (தொல். சொல். 159) என்றாற் போலக் கொள்க. இன்னமுது, உருவகம். 4. பொ-ரை: நல்ல எண்ணம் நீங்குதலால், அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணுகின்ற எண்ணங்களும், மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன்றொழியுமாறு, உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து, அந்நகரினுட் சென்று, எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ! கு-ரை: உணவாய்க் கழிந்தொழியாது, செல்வமாய்ச் சிறந்து நிற்கும் நெல்லென்பார், 'செல்வம்' என்றும், திருவாரூரை அணுக விரும்பும் விருப்ப மிகுதி தோன்ற, 'எல்லை மிதித்து' என்றும் அருளினார், "என்னுயிர்க் கின்னமுதை" என மேலைத் திருப்பாடலில் ஓதப்பட்டது, இத் திருப்பாடலினும் வந்து இயைந்தது, 5. பொ-ரை: நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும், எல்லாவற்றினும் முன்னதாக, சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும், கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும், உலகிற்கு முதல்வனும், வலிய தலை ஓட்டின் கண், மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
|