843. | நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து தென்றன் மணங்கமழுந் தென்திரு வாரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. | | 2 |
844. | முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால் பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச் செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக் கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொ லெய்துவதே. | | 3 |
எடுத்த உடம்பிற்குச் செயலறுதியையும், இறுதியையும் பயப்பவற்றை. சிந்தையால்' எனவும், திருவாரூரினுள் எனவும், உருபும், உருபின் பொருள்படவரும் இடைச் சொல்லும் விரிக்க. ஏழாவதன் தொகைக் கண்ணும், வருமொழி வினையாயவிடத்துச் சிறுபான்மை வல்லினம் மிகாமையறிக. இத் திருப்பதிகத்தினுள், 'என்றுகொல்' என்பவற்றில் கொல் ஐயப்பொருட்டு. ஐயம் அவா அடியாக நிகழ்ந்தது என்க. 2. பொ-ரை: செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு, காலை மாலை இருபொழுதினும், நெருங்கிய மலர்களைத் தூவி, சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு, தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ! கு-ரை: "எந்தை பிரானாரை" என்பது, மேலைத் திருப் பாடலினின்றும் வந்து இயைந்தது. 3. பொ-ரை: தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில், பெரிய அறியாமை காரணமாக, வருங்காலத்திற் பெற நினைத்த நினைவுகளும், அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு, செந்நெற்களை விளைவிக்கின்ற, நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய, அழகிய திருவாரூரினுட் சென்று, எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை, யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ! கு-ரை: "முன்னை முதல்' என்றது, 'அனாதி தொட்டு' என்றவாறு, 'வருகின்ற, பெற' என்பன, சொல்லெச்சங்கள். "நினைவு" என்றது, அவாவை, அவாவே பிறவிக்கு வித்தாகலின், அதனால்
|