83. திருவாரூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருக்கச்சியில் இடக்கண் பெற்று, ஏகம்பத் திறைவர் திருக்காட்சி கொடுத்தருளக் கண்டு, திருப்பதிகம் பாடிச் சிலநாள் தங்கியிருந்து, பின் திருவாரூருக்குச் செல்ல விரும்பிக் காஞ்சித் திருநகரைக் கடந்து, 'எந்தைபிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது' என்றுபாடிச் சென்றருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 291) குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும்.பண்: புறநீர்மை பதிக எண்: 83 திருச்சிற்றம்பலம் 842. | அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக் கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. | | 1 |
1. பொ-ரை: முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ! கு-ரை: "அந்தி" என்றது இரவையும், "நண்பகல்" என்றது பகலையும் குறிக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன. பதம் - சொல்; அஃது ஆகுபெயராய், எழுத்தினை உணர்த்திற்று, "சகரக் கிளவி", "வகரக் கிளவி" (தொல். எழுத்து. 62, 81.) என்றவற்றில், "கிளவி" என்றதுபோல. இனி, 'திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும்' என்றலும் மரபாதல் பற்றி அவற்றை, "பதம்" என்று அருளினார் என்றலுமாம், "சொல்லிப் பராமரியா" என்றதனை, 'நடந்து வந்தான், ஓடி வந்தான்' என்பன போலக் கொள்க. பராமரித்தல் - ஆராய்தல். "வல்வினை" என்றது,
|