853. | கூத லிடுஞ்சடையும் கோளர வும்விரவுங் | | கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள் | | ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந் | | துள்ளுரு காவிரசும் மோசையைப் பாடலும்நீ | | ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன் | | அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக் | | கால லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன் | | கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | | 2 |
திருமேனியையும், தேவர்கள் ஓலமிட, அதற்கு இரங்கிக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட நினைவுக்குறி நீங்காதிருக்கின்ற, மேகம்போல விளங்குகின்ற கண்டத்தையும், எட்டுத்தோள்களையும், அழகிய நல்ல சடையின்மேல் உள்ள அணிகளையும் கண்குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ! கு-ரை: அடித்தொழல், அடியின்கண் தொழுதல் என்க. "அடித் தொழலும்" என்று அருளினாரேனும், 'தொழுதலையுடைய அடியும்' என, ஏனையவற்றோடு இயைய உரைத்தலே திருவுள்ளமாதல் அறிக. "சூது", "வண்ணம்" ஆகுபெயர்கள். ஆகி வருதல், மிகுந்து வருதல். அதற்கு, 'ஒளி' என்னும் வினைமுதல் வருவிக்க. "வரும்" என்றது, 'வருவதுபோலும்' என்னும் பொருட்டு. சடைமேல் உள்ள அணிகள், பாம்பு, வெண்டலை முதலியன. கார் - நீர்; 'மிக்க' என்றது இசையெச்சம். "கொல்" என்றதற்கு, மேலைத் திருப்பதிகத்துள் உரைத்தவாறே உரைக்க. ஓகாரம், இரக்கம். 2. பொ-ரை: மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவுடைய தலைவனை, அடியேன், என்பால் உள்ள துன்பங்களெல்லாம் கெடுமாறு, அடியவர் உனது பெருமைகளை நினைந்து மனம் உருகி, செறிந்த இசையைப் பாடுதலும், அவர் நீயேயாகும் பேற்றைப் பெறுதலை உணர்ந்து, அவரோடு அன்பு மிகுந்து, உனது திருவடியை மனம் பொருந்திப் பாடுமாற்றைக் கற்று, உனது குளிர்மிகுந்த சடைமுடியையும், அதன்கண் பொருந்திய கொடிய பாம்பையும், கொக்கிறகையும், குளிர்ந்த ஊமத்த மலரையும், அன்பு மேலும் மேலும் பெருகுமாறு, அகங்கையிற் சிறந்த மலர்களைக் கொண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ! கு-ரை: "விரவும்" என்றதனை, "கோளரவும்" என்றதற்கு
|