பக்கம் எண் :

1150
 
856.கொல்லை விடைக்குழகுங் கோல நறுஞ்சடையிற்

கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே

முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்

மோக மிகுத்திலகுங் கூறுசெ யெப்பரிசும்

தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்

திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்

கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ

கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

5


மலைமகள் தழுவியதனால் உண்டாகிய வடுவினையும், அடியேன், புகழ்ந்து பாடக்கற்றன பலவற்றாலும் துதித்துக் கைகூப்பி வணங்குதல் எந்நாளோ!

கு-ரை: பாவகம் - நினைவு; அது, நினைக்கப்படுகின்ற உருவத்தைக் குறித்தது. 'பட்டு, அதள்' என்றனவும் உடைகளையே யாதலின், கோவணத்தோடு ஒருங்கெண்ணப்படுவவாயின. நீறுதுதை மார்பிடை' என மாற்றியுரைக்க.

5. பொ-ரை: மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, 'திருக்கானப் பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானது, முல்லை நிலத்திற்கு உரிய விடையினது அழகையும், அழகிய நல்ல சடையின் கண் கொத்தாய் உள்ள பூக்களையும், மார்பில் கொன்றை மலரின் மாலையையும், அதன் அருகே ஒரு பாகத்தில், முல்லை அரும்பின் தன்மையைக் கொண்ட நகையினையும், மெல்லிய இயல்பினையும் உடையவளாகிய உமாதேவி, காதலை மிகுதியாகக்கொண்டு விளங்குகின்ற அப்பகுதி தருகின்ற எல்லாத் தன்மைகளையும், தில்லை நகரில் உள்ள சபையிற் பொருந்தி நின்று ஆடுகின்ற புகழையுடைய நடனத்தையும், கையில் உள்ள வலிய மழு, மிக்க தீ என்னும் இவற்றையும், அடியவர் சாத்தும் மணிவடத்தின் அழகையும் காண்பது எந்நாளோ!

கு-ரை: 'விடைக் கழகும்' என்பது பாடம் அன்று. "தொத்து" என்றது, செயற்கைப் பிணிப்பாகிய மாலையை உணர்த்திற்று; அதனை, மார்பிலணியும் தாராகக் கொள்க. உமாதேவி விளங்கும் பகுதி தருகின்ற தன்மைகள்.


"தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்"

(தி. 8 திருவா. கோத் - 18)