857. | பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும் | | பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித் | | தெண்ணுத லைப்பெருமான் என்றெழு வாரவர்தம் | | மேசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி | | நண்ணுத லைப்படுமா றெங்ஙன மென்றயலே | | நையுறு மென்னைமதித் துய்யும்வ ணம்மருளுங் | | கண்ணுத லைக்கனியைக் காண்பது மென்றுகொலோ | | கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | | 6 |
என்பதில் அம்மைக்கு உரியனவாகக் கூறப்பட்டவை காட்டும் அழகுகள். நடனம் எவ்விடத்தும் செய்யப்படினும், அதற்குச் சிறப்பிடம் தில்லையாதல் பற்றி, "தில்லை நகர்ப் பொதுவுற்று ஆடிய சீர்நடம்" என்று அருளினார். "கைமிசை" என்றது, தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும். "காளையை" என்னும் இரண்டனுருபை, 'யானையைக் கோட்டைக் குறைத்தான்' என்புழி, 'யானையை' என்பதில் உள்ள இரண்டனுருபு போலக் கொள்க. 6. பொ-ரை: தாமரை மலரில் உள்ள திருமகளைப் போலும் மகளிரது, யாழை முறைப்படி யமைத்தலைப் பயன்படச் செய்கின்ற பாடலின் சிறப்பையும், அதன்கண்ணே அவர்கள் நெடிது நிற்றலையும், அதற்கு ஏதுவாகிய அவர்களது பத்தியையும், தான் ஒருவனே வீடுபேற்றை அளித்தலால், அதனை விரும்புவோர் யாவராலும் உள்ளத்து இருத்தப்படுகின்ற முதற்கடவுள் என்று தன்னை நினைந்து துயிலெழுகின்ற மெய்யுணர்வுடையோர், அதன் பொருட்டு அவன் முன் வாடிநிற்கும் வாட்டத்தினையும், யாவர்க்கும் இறைவனாகிய என் தந்தையையும் ஒருங்கு காணுதலைப் பொருந்துமாறு எவ்வாறு என்று, சேய்மையில் நின்று வருந்துகின்ற என்னையும் பொருளாக நினைந்து உய்தி பெறும்படி அருள்செய்யும் கண்ணுதற் கடவுளும், கனிபோல இனிப்பவனும் ஆகிய, மிக்க நீரையுடைய, 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அடியேன் காணப்பெறுவதும் எந்நாளோ! கு-ரை: "பங்கய மாதனையார்" என்றதனை, முதற்கண் வைத்து உரைக்க. "ஆர் பாடல்" என்றது. பிறவினை வினைத்தொகை. "அளித்து" என்னும் எச்சம், செயப்பாட்டு வினையாய் நின்ற "எண்ணு" என்றதனோடு முடிந்தது. "விரவி" என்றதனை, 'விரவ' எனத் திரிக்க. மகளிரும் ஆடவரும் அகிய அடியவரோடு இறைவனையும் ஒருங்குகாணுதல் எங்ஙனம் என்று ஏக்கற்றதனை அருளிச்
|