91. திருவொற்றியூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருக்காளத்தியிலிருந்து திருப்பருப்பதம், திருக்கேதாரம் இவற்றை இறைஞ்சிப் பாடிச் சிலநாள் தங்கியிருந்து, பெருமான் வீற்றிருக்கும் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, பூவுலகச் சிவலோகம் என விளங்கும் திருவொற்றியூரை அடைந்தார். அடியவர்கள் மங்கலப் பொருள்கள் முதலியவற்றுடன் எதிர்கொள்ளத் திருக்கோயிலை யடைந்து, ஏட்டு வரியில் 'ஒற்றிநகர் நீங்க' என்று எழுதும் பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 204) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமையை வகுத்தோதி, 'அவருக்கு ஏற்ற இடம் திருவொற்றியூரே' என அருளிச் செய்தது. பண்: குறிஞ்சி பதிக எண்: 91 திருச்சிற்றம்பலம் 923. | பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டு வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே. | | 1 |
924. | பந்துங் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர் |
1. பொ-ரை: உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து நிற்பார் செய்த வினைகளை நீக்குகின்ற இறைவரது இடம், மக்கள் தம் பால் சேர்க்கின்ற பெரிய மரக்கலங்களையும், சிறிய படகு களையும் கரையிற் சேர்க்கின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே. கு-ரை: "பாட்டும்" என்ற உம்மை, எச்சத்தோடு, உயர்வு சிறப்பு, "திரிவார்" என்றது, 'பிற செயலைச் செய்யார்' என்னும் குறிப்பினது. ஈற்றின் உள்ள ஏகாரம், பிரிநிலை.
|