927. | பணங்கொள் அரவம் பற்றி பரமன் கணங்கொள் சூழக் கபாலம் ஏந்தி வணங்கும் இடைமென் மடவார் இட்ட உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே. | | 5 |
928. | படையார் மழுவன் பால்வெண் ணீற்றன் விடையார் கொடியன் வேத நாவன் அடைவார் வினைகள் அறுப்பான் என்னை உடையான் உறையும் ஒற்றி யூரே. | | 6 |
கு-ரை: இது, சிவபிரான்மேல் காதல்கொண்டாள் ஒருத்தியது கூற்றாக அருளிச்செய்யப்பட்டது. "என்னது" என்பதில் னகர வொற்று, விரித்தல், "கவர்வான்", வான் ஈற்று வினையெச்சம். கடற்கரைச் சோலை. "புறவு" எனப்பட்டது. "தன்னை முன்னம் நினைக்கத் தருவான் - உன்னப்படுவான்" என்றதனை. என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன் என்னைத் தன்னடி யான்என் றறிதலும் தன்னை யானும் பிரான்என் றறிந்தேனே. (தி. 5. ப. 91. பா. 8.) என்று அருளிச்செய்ததனானும் அறிக. 5. பொ-ரை: படத்தையுடைய பாம்பைக் கையில்பிடித்திருப்பவனும், மேலானவனும், பூத கணங்கள் சூழத் தலையோட்டை ஏந்திச் சென்று, துவளுகின்ற இடையினையுடய மகளிர் இடுகின்ற சோற்றை ஏற்பவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான். கு-ரை: 'பற்றிப் பரமன்' என்பது பாடம் அன்று. 'ஏந்திக் கவர்வான்' என இயையும். வருகின்ற திருப்பாடலில் உள்ள, 'உறையும்" என்றதனை, மேலும், கீழும் உள்ள திருப்பாடல்களிலும் இயைத்துரைக்க. 6. பொ-ரை: படைக்கலத் தன்மை பொருந்திய மழுவையும், பால்போலும் வெள்ளிய திருநீற்றையும், இடபம் பொருந்திய கொடியையும்,
|