929. | சென்ற புரங்கள் தீயில் வேவ வென்ற விகிர்தன் வினையை வீட்ட நன்று நல்ல நாதன் நரையே றொன்றை உடையான் ஒற்றி யூரே. | | 7 |
930. | கலவ மயில்போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப் படியான் உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் உலவுந் திரைவாய் ஒற்றி யூரே. | | 8 |
வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும், தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழப்பவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன்' திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான். கு-ரை: "படை" என்றது, அதன் தன்மையை. "படையார் மழுவொன்று பற்றிய கையன்" (திருமுறை - 4. 83. 1) என்றதனை நோக்குக. 7. பொ-ரை: வானத்தில் உலாவிய மதில்கள் நெருப்பில் வெந்தொழியுமாறு அவற்றை வென்ற, வேறுபட்ட தன்மையை உடையவனும், வினைகளைப் போக்குதற்கு மிகவும் நல்ல கடவுளும், வெண்மையான இடபம் ஒன்றை உடையவனும் ஆகிய இறைவன், திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான். கு-ரை: "நன்று" என்பது, பெரிதும் எனப் பொருள் தந்தது. 'நன்றும்' எனப் பிரிப்பினும் ஆம். 8. பொ-ரை: தோகையையுடைய மயில்போலும், வளையை அணிந்த கைகளையுடைய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற, பவளம்போலும் உருவத்தையுடையவனாகிய இறைவன், கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே, உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான். கு-ரை: 'கலாபம்' என்னும் ஆரியச் சொல், "கலவம்" எனத் திரிந்தது. 'போல் நல்லார்' என்றது, வினைத்தொகை.
|