பண்:பஞ்சமம் பதிக எண்:100 திருச்சிற்றம்பலம் 1017. | தானெனை முன்படைத்தான் அத | | றிந்துதன் பொன்னடிக்கே | | நானென பாடலந்தோ நாயி | | னேனைப் பொருட்படுத்து | | வானெனைவந் தெதிர்கொள்ள மத்த | | யானை அருள்புரிந்து | | ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 1 |
1. பொ-ரை: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! கு-ரை: ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். "அது அறிந்து" என்றதனால், தோற்றுவித்தது, பாடுதற்பொருட்டு என்றதாயிற்று. 'அடிக்கு' என்பது வேற்றுமை மயக்கம். நொடித்தல் அழித்தல். எனவே, 'நொடித்தான் மலை' என்றது, 'அழித்தற் கடவுளது மலை' என்னும் பொருளதாய், திருக்கயிலை மலைக்குப் பெயராயிற்று. 'நொடித்தான்' என இறந்த காலத்தால் அருளிச் செய்தது, நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் | ஆறு கோடி நாராயணர் அங்ஙனே |
|