பக்கம் எண் :

1279
 
1018.ஆனை உரித்தபகை அடி

யேனொடு மீளக்கொலோ

ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி

யானை நினைந்திருந்தேன்

வானை மதித்தமரர் வலஞ்

செய்தெனை யேறவைக்க

ஆனை அருள்புரிந்தான் நொடித்

தான்மலை உத்தமனே.

2

1019.மந்திரம் ஒன்றறியேன் மனை

வாழ்க்கை மகிழ்ந்தடியேன்

சுந்தர வேடங்களால் துரி

சேசெயுந் தொண்டன்எனை



ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.

 (தி. 5 ப. 100 பா. 3)

என்றருளிச் செய்தவாறு, எண்ணில்லாத தேவர் யாவரையும் ஈறுசெய்து, தான் ஈறின்றியே நிற்கும் முதன்மையினை விளக்குதற் பொருட்டு. இதனானே, என்றும் அவ்வாறு நிற்றல் இனிது பெறப்படும்.

2. பொ-ரை: யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ!

கு-ரை: ஓடு, ஆன் உருபின் பொருளில் வந்தது. "கொல்" ஐயமாகலின், அதற்குரியது வருவித்துரைக்கப்பட்டது. ஓகாரம், அசை நிலை. 'மதித்த' என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

3. பொ-ரை: நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது,