பக்கம் எண் :

1280
 
அந்தர மால்விசும்பில் அழ

கானை யருள்புரிந்த

துந்தர மோநெஞ்சமே நொடித்

தான்மலை உத்தமனே.

3

1020.வாழ்வை உகந்தநெஞ்சே மட

வார் தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென்னை அது

மாற்றி அமரரெல்லாம்

சூழ அருள்புரிந்து தொண்ட

னேன் பரமல்லதொரு

வேழம் அருள்புரிந்தான் நொடித்

தான்மலை உத்தமனே.

4



அழகைத் தரும் வேடங்களைப் புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!

கு-ரை: அந்தரம் - வெளி. 'என்னை' என்பது வேற்றுமை மயக்கம். "தரம்" உடையதனைத் "தரம்" என்று அருளினார்.

4. பொ-ரை: உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!

கு-ரை: ஆழ முகத்தல் - அழுந்துதல். 'ஆழத்தை விரும்பிய' என்றும் ஆம். 'ஆழ வுகந்த' என்பது பாடம் போலும்!

5. பொ-ரை: 'மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற