1021. | மண்ணுல கிற்பிறந்து நும்மை | | வாழ்த்தும் வழியடியார் | | பொன்னுல கம்பெறுதல் தொண்ட | | னேன்இன்று கண்டொழிந்தேன் | | விண்ணுல கத்தவர்கள் விரும் | | பவெள்ளை யானையின்மேல் | | என்னுடல் காட்டுவித்தான் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 5 |
1022. | அஞ்சினை ஒன்றிநின்று அலர் | | கொண்டடி சேர்வறியா | | வஞ்சனை யென்மனமே வைகி | | வானநன் னாடர்முன்னே |
பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன்' என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! கு-ரை: 'கண்டொழிந்தேன்' என்புழி, 'என' என்பதொரு சொல் வருவிக்க. 'நும்மை' என்பதனை, 'தன்னை' எனப் பாட மோதுதலே சிறக்கும். 6. பொ-ரை: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என் மனத்தின்கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
|