| துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட | | னேன்பர மல்லதொரு | | வெஞ்சின ஆனைதந்தான் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 6 |
1023. | நிலைகெட விண்ணதிர நிலம் | | எங்கும் அதிர்ந்தசைய | | மலையிடை யானைஏறி வழி | | யேவரு வேனெதிரே | | அலைகட லால்அரையன் அலர் | | கொண்டுமுன் வந்திறைஞ்ச | | உலையணை யாதவண்ணம் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 7 |
1024. | அரவொலி ஆகமங்கள் அறி | | வார்அறி தோத்திரங்கள் | | விரவிய வேதஒலி விண்ணெ | | லாம்வந் தெதிர்ந்திசைப்ப |
கு-ரை: "நின்று" என்ற வினையெச்சம், எண்ணின்கண் வந்தது. 'வெஞ்சினம்' இனஅடை. 7. பொ-ரை: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! கு-ரை: 'மலையிடை' என்பது இன அடை. "கடலால்" என்றது, 'கடலுக்கு' என வேற்றுமை மயக்கம். 'உலையணையாத வண்ணம்' என்புழி, 'செய்தான்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. 8. பொ-ரை: 'அரகர' என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும்,
|