| வரமலி வாணன்வந்து வழி | | தந்தெனக் கேறுவதோர் | | சிரமலி யானைதந்தான் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 8 |
1025. | இந்திரன் மால்பிரமன் னெழி | | லார்மிகு தேவரெல்லாம் | | வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த | | யானை யருள்புரிந்து | | மந்திர மாமுனிவர் இவன் | | ஆர்என எம்பெருமான் | | நந்தமர் ஊரனென்றான் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 9 |
அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, 'வாணன்' என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! கு-ரை: 'வழிதர' என்பது, 'வழிதந்து' எனத் திரிந்து நின்றது. "சிரம்" என்றது, தலையாய தன்மையை. 9. பொ-ரை: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், 'இவன் யார்' என்று வினவ, "இவன் நம் தோழன்; 'ஆரூரன்' என்னும் பெயரினன்" என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! கு-ரை: 'நந் தமன்' என்பதே பாடம் என்க.
|