பக்கம் எண் :

128
 

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 4

நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்கள்

சிரோமணி, வித்துவான் வி. சபேசன்,
தமிழ்ப்பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.

ஏயர்கோன் கலிக்காம நாயனார்: 1

இவர் சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில், வேளாளர் மரபில் தோன்றியவர். சோழ அரசர்களிடத்தில் பரம்பரையாகச் சேனைத் தலைவராக விளங்கிய ஏயர் குடியைச் சேர்ந்தவர். கலிக்காமர் என்பது இவரது இயற்பெயர். இவர் குரு, லிங்க, சங்கம பத்தியில் சிறந்தவராய் விளங்கினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானைப் பரவையாரிடம் தூதாக அனுப்பிய செய்திகேட்டு மிகச் சினந்து, "நாயனை அடியான் ஏவுங்காரியம் மிக நன்று. இப்படிச் செய்பவன் தொண்டனாம். இது என்ன பாவம். பொறுக்க வொண்ணாத இந்தப் பெரும்பாதகத்தைக் கேட்டும் உயிரோடிருக்கின்றேனே" என்று வருந்தி அவரைக் காணின் யாது நிகழுமோ என்று சினத்துடன் இருந்தார். இச்செய்தி யறிந்த சுந்தரர், பெருமானிடம் விண்ணப்பித்தார். பெருமானும் கலிக்காமருக்குச் சூலை நோய் அருளி, அவரிடம் 'வன்றொண்டன் தீர்க்கில் அன்றி முந்துற ஒழியாது' என்றும், சுந்தரரிடம் 'இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்றசூலையை நீ சென்று தீர்ப்பாயாக' என்றும் அருளிச் செய்தார். சுந்தரரும், தாம் வரும் செய்தியைக் கலிக்காமருக்கு முன்னர் சொல்லியனுப்பி எழுந்தருளினார். சுந்தரர் வருகின்ற செய்தியறிந்த கலிக்காமர் "என்னை நீங்காப் பாதகச்சூலைதனை உற்ற இவ்வயிற்றினோடுங் கிழிப்பன்" என்று தன் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். அவரது மனைவியாரும் உடன்போக எண்ணியபோது, சுந்தரர் எழுந்தருளினார் என்று கேட்டு, தம் நாயகர் செய்கையை மறைத்து ஏவலர்களை எதிர்கொண்டழைக்கச் செய்து அருச்சனை முதலியவைகள் புரிவித்தார். அவற்றை ஏற்றுக்கொண்ட சுந்தரர், கலிக்காமருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக


1. தி. 12 பெரிய புராணம்.