பக்கம் எண் :

127
 

கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டார். இவ்வரலாற்றை நாயனார்.

"கடற்சூர் தடிந்திட்ட சேந்தர்"

(தி. 7 ப. 64 பா. 6)

என்று குறிப்பிடுதல் காண்க.

முடிவுரை:

இங்குக் குறிக்கப்பெற்ற சிறந்த வரலாறுகள் அன்றியும், தல புராணங்கள், சில இடங்களில் வழங்கும் செவி வழிச்செய்திகள் முதலியன பற்றி ஆங்காங்கு அறிதற்குரிய சிறுசிறு வரலாறுகளும் இவ்வேழாந் திருமுறையில் அமைந்திருத்தல் காணப்படும். அவைகள் அனைத்திலும் சிறப்புடைய புராண வரலாறுகளே இங்குத் தொகுத்துத் தரப்பட்டன. இவைகளையும் ஏனையவற்றையும் உணர்தலால் புராணங்களின் பெருமை இனிது விளங்கப்பெற்று அவற்றின் பயனை அடையலாகும். இவ்வரலாற்றுச் சிறப்புக்களை தமிழுலகமும் சைவ உலகமும் உணர்ந்து பயன் எய்துவனவாக.