முதலிய பல அசுரர்கள் தோன்றினர். அவர்களுக்குக் காசிபர் தவம் செய்து வீடுபேறுஅடைவதற்குரிய மொழிகளை உபதேசித்தார். அப்பொழுது மாயை தன்பிள்ளைகள் மிக்க செல்வத்தையும், வெற்றியையும், இன்பத்தையும், நீண்ட ஆயுளையும் பெற வேண்டுவனவற்றை உபதேசிக்க வேண்டுமெனக் காசிபரிடத்தில் கூறினாள். காசிபர் "உன் எண்ணம் அதுவாயின் அதனை நீயே அவர்களுக்குச் சொல்வாயாக" என்றார். அவ்வாறே மாயை அவைகளைக் கூறி அவை பெறுதற்கு வேண்டிய உதவிகளையும் செய்தாள். மாயையின் சொற்படி சூரபன்மன் வீரயாகம் புரிந்து வேள்வி குண்டத்தில் வீழ்ந்தான். அதைக்கண்ட அவனது இளவலாகிய சிங்கமுகன் அவ்வேள்வியைத் தொடர்ந்து செய்தான். பெருமான் அந்தணர் வடிவில் சென்று அவர்கள் வரலாற்றை வினவியறிந்து வேண்டுவனவற்றை யளித்துச் சூரபன்மனையும் எழுப்பி, காட்சி வழங்கியருளினான். பின்னர் சூரபன்மனின் வேண்டுகோட்படி 'பூமியிலுள்ள ஆயிரங்கோடி அண்டங்களுள் ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டுயுகம் ஆளுக' என்று அருளிப் பல வரங்களையும் அருளினான். அவ்வரங்களைப் பெற்ற சூரபன்மன் திக்கு விஜயம் செய்து தேவர்களை ஏவல்கொண்டு, வீரமகேந்திரபுரம் என்னும் நகரையும், மாயாபுரம் என்னும் நகரத்தையும் உண்டாக்கி முடிசூடி எல்லா வுலகங்களையும் அரசாண்டு வந்தான். சூரபன்மனால் துன்புற்ற திருமால் முதலிய தேவர்கள் சிவ பெருமானை வேண்டி நின்றனர். அவர்கள் துன்பந்துடைக்கக் கருதிய பெருமான், முருகப்பிரானையும் வீரபாகு முதலியவர்களையும் தோற்வித்தருளினான். பின்னர் பெருமான் ஆணைப்படி முருகப் பெருமான் வீரபாகு முதலிய சேனைத் தலைவர்கள் தன்னைச் சூழ்ந்து வர சூரபன்மனுடன் போர் புரிய எழுந்தருளி, கிரவுஞ்சகிரியில் மாயையில் வல்லவனாய் விளங்கிய தாரகனைக் கொன்று திருச் செந்திலம்பதியில் எழுந்தருளியிருந்து வீரபாகு தேவரைச் சூரபன்மனிடம் தூதாக அனுப்பினான், சூரபன்மனும் போருக்கு எழவே, முருகப்பிரான், பானுகோபன், சிங்கமுகன் முதலியவர்களைக் கொன்று சூரபன்மனுடன் போரிட்டு, தமது பேருருவக் காட்சியை அவனுக்கு அளித்து' மீண்டும் போரிட்டார். சூரபன்மன் மிகப் பெரிய மாமர வடிவாய் நின்றான். அவன் மீது தமது வேற்படையையேவி மாமரத்தை இருபிளவாக்கி அழித்தார். சிவபெருமான் அளித்த அழியா வரத்தினால் அவன் உடலின் இரண்டு கூறுகளும், சேவலும் மயிலும் ஆகி நின்றன. முருகப்பிரான் சேவலைக்
|