முத்துமாலை அணிந்துகொண்டு நீராடினான். அது நீரில் தவறி வீழ்ந்துவிட்டது. அதனால் துன்புற்ற அரசன் நீரில் நின்றவாறே பெருமானே நீ ஏற்றருள்க என்று வேண்டினான். பெருமான், சோழனின் மனவருத்தந் துடைக்கக் கருதி திருமுழுக்காட்டிற்குத் திருமஞ்சனம் எடுக்கச்சென்ற பொழுது அம் மாலையைக் குடத்திற்குள் புகச்செய்து, திருமஞ்சனம் செய்யும் பொழுதுதான் அணிந்துகொண்டு உறையூர்ச் சோழன் திருவானைக் காவில் வழிபாட்டிற்கு வந்த நேரத்தில் முத்துமாலையுடன் காட்சி வழங்கி அருள்புரிந்தான். இவ்வரலாற்றைச் சேக்கிழார், "உறையூர்ச்சோழன் மணியாரஞ் சாத்துந்திறத்தை உணர்ந்தருளி" (தி. 12 ஏயர்கோன். பா. ??) வளவர் பெருமான் மணியாரம் சாத்திக்கொண்டு | வரும்பொன்னிக் | கிளருந்திரை நீர்மூழ்குதலும் | வழுவிப்போகக்கேதமுற | | அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்காட்ட | அணிந்தருளித் | | தளரும் அவனுக்கருள் புரிந்த தன்மை | சிறக்கச் சாற்றினார். | (தி. 12 ஏயர்கோன். பா. 77) |
என்று கூறியுள்ளமை கண்டு மகிழலாம். சுந்தரர் இவ்வரலாற்றைத் திருவானைக்காப் பதிகத்தில், "தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும் நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே ஆரங் கொண்ட எம் ஆனைக் காவுடை ஆதி" (தி. 7 ப. 75 பா. 7) என்று கூறியுள்ளமை கருதத்தக்கது. முருகன் சூர் தடிந்தது: 1 காசிபமுனிவருக்கு மாயையினிடத்தில் தோன்றியவன் சூரபன்மன். அவனுக்குத் தம்பியர்களாக சிங்கமுகாசுரன், தாரகாசுரன்
1. கந்தபுராணம்
|