பக்கம் எண் :

124
 

வரலாற்றைச் சுந்தரர்,

".............நீர்முன் கொண்ட உயர்தவத்தை அமரர் வேண்ட
அழிக்கவந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்துகந்த வெற்றியென்னே வேலைசூழ் வெண்காடனீரே"

(தி. 7 ப. 6 பா. 2)

என்று கூறியுள்ளமை காண்க.

வாயில்காவலராயினமை: 1

திரிபுரத்தவர்கள் நாட்டில் சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்ற மூவரும் ஆதிபுத்தனின் பொய்யுரையால் மயங்காது சிவநெறியினின்றும் பிறழாதிருந்தனர். அதனால் பெருமான் திரிபுரத்தை அழித்தபொழுது அழியாது நின்றனர். பெருமான் அவர்களை நோக்கி உமக்கு வேண்டும் வரம் யாது என்று கேட்க, தேவரீர், திருக்கோயிலில் வாயில் காவலராக இருக்க அருள்புரியவேண்டும் என்றனர். பெருமானும் 'நீவிர் காஞ்சியை யடைந்து எம்மைப் பூசித்தால் அதனை யளிப்போம்' என்று திருவாய்மலர்ந்தருளினான். அவ்வாறே அவர்கள் காஞ்சியையடைந்து முப்புராரீசன் என்னும் பெயரினால் ஓர் இலிங்கம் தாபித்துப் பூசித்து அப்பேற்றையடைந்தனர். இவ் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

"மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவலாளர் என் றேவிய பின்னை

ஒருவன் நீகரி காடரங் காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவ"

(தி. 7 ப. 55 பா. 8)

 

என்று அருளியிருத்தல் காண்க.

முத்துமாலை அணிந்துகொண்டது: 2

உறையூரிலிருந்து சோழநாட்டை ஆண்டு வந்த சோழன் ஒருவன் சிவபத்தியிற் சிறந்திருந்தான். அவன் ஒருநாள் காவிரியில் 


1. காஞ்சிப்புராணம் - முப்புராரிகோட்டப் படலம்.

2. தி. 12 பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.