கீழே சாய்க்கும் பொழுது நீங்கள் பழைய உருவத்தைப் பெறுவீர்கள்" என்று கூறினார். இருவரும் அவ்வாறே கண்ணபிரான் வளர்ந்த மாளிகை வாசலில் இரண்டு மருதமரங்களாகி நின்றனர். ஒரு நாள் அசோதை கண்ணபிரானை எங்குஞ் செல்லாதவாறு உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தாள். ஆனால் கண்ணன் உரலையுஞ் சேர்த்து இழுத்துக்கொண்டு இரு மருதமரத்தின் இடையே சென்றார். உரல் மருதமரத்தில் சிக்கி இழுபட, மருதமரங்கள் உடனே நிலத்தில் சாய்ந்தன. அவ்வளவில் குபேரன் மக்கள் சாபந் தீர்ந்து பழைய உருவைப் பெற்றனர். இவ்வரலாற்றை நாயனார், "மருதுகீறி ஊடு போன மால்" (தி. 7 ப. 7 பா. 10) என்று கூறுவதால் அறியலாம். மன்மதனை உயிர்ப்பித்தது: 1 திருமால் மனத்தில் உதித்தவனாகிய மன்மதன் உயிர்க் கூட்டங்களை மயக்கி உலகை அடக்கியிருந்தான். சூரபன்மன் முதலிய அரக்கர்களால் துன்புற்ற தேவர்கள் விரும்பியவண்ணம் நான்முகன், மன்மதனை அழைத்து, முருகப்பெருமானின் தோற்றத்திற்காக, பெருமான்மீது மலர்க்கணை எய்யும்படியும், இல்லையேல் சாபம் கொடுப்பதாகவும் கூறினான். சாபத்தால் வருந்துவதை விட கண்ணுத லோன்மேல் கணையெய்து மாய்தலே சிறப்புடையது என்று கருதி உடன்பட்டு இரதிதேவியுடன் திருக்கயிலையையடைந்த மன்மதன், திருநந்திதேவரின் அனுமதி பெற்று உள்ளே சென்று, பெருமானின் மோன நிலையைக் கண்டு கலங்கிப் பின் தெளிந்து மலர்க்கணைகளைச் சொரிந்தான். மலர்க்கணை பட்டதும் பெருமான் சிறிதே கண்விழித்துப் பார்த்தார், நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் மன்மதன் எரிந்து சாம்பரானான். அதைக்கண்ட இரதிதேவி அழுது அரற்றி, 'எம்பெருமானே! பிரமன் முதலிய தேவர்களின் தூண்டுதலினால் அடியவளாகிய எனது கணவன் மலர்க்கணையெய்து மாண்டனன். அக்குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும்' என வேண்டிநின்றாள். பெருமானும், உமாதேவியை நாம் மணம் புரியுங் காலத்து உன் கணவனை உயிர்பெற்றெழச் செய்வோம் என்று வரமருளினான். அவ்வாறே, பெருமான் உமாதேவியின் தவத்தைக் கண்டு இரங்கி காட்சி தந்து திருக்கல்யாணம் செய்தருளியபோது மன்மதனை யெழுப்பி, "இரதிதேவிக்கு மாத்திரம் உருவமாயும், மற்றவர்களுக்கு அருவமாயும் இருக்குமாறு அருள்புரிந்தான்" இவ்
1. கந்த புராணம் - காமதகனப் படலம், மோனநீங்கு படலம்.
|