மானசவாவியில் தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டு எடுத்து வந்து மேனையினிடத்தில் கொடுத்துப் பார்வதி என்னும் பெயர் சூட்டி வளர்த்துவந்தான். ஐந்து வயது நிரம்பியதும் பார்வதி, பெருமானையே திருமணம் புரிய விரும்பி, தந்தையிடம் கூறித் தவச்சாலை ஒன்றை அமைத்துத் தவம் புரியலானாள். பார்வதியின் தவத்திற்கிரங்கிய பெருமான், கிழவேதியர் வடிவுடன் தவச்சாலையை யடைந்தார். பார்வதி தவமியற்றும் காரணம் வினவி, சிவபெருமானைத் திருமணம் புரியத் தவம் இயற்றுவதை அறிந்தார். திருமாலினாலும் நான்முகனாலும் அறியவியலாத பெருமான் 'உன்னை மணம் புரியமாட்டார். உன் தவத்தை விடுக' எனப் பலவகையாக இகழ்ந்துரைத்தார். இவற்றிற்கெல்லாம் பார்வதி மனம் தளராது உறுதியுடன் இருப்பதைக் கண்டு பெருமான் காட்சிதந்து அவள் வேண்டும் வரமருளி மணந்துகொண்டார். இவ் வரலாற்றைத் திருக்கலயநல்லூர்த் திருப்பதிகத்தில் | "குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு | குறிப்பினொடுஞ் சென்றவள் தன்குணத்தினை நன்கறிந்து | | விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த | விண்ணவர்கோன் கண்ணுதலோன்" | (தி. 7 ப. 16 பா. 1) |
என்று குறிப்பிடுதல் கருதத்தக்கது. மருதிடையே தவழ்ந்தது 1 நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் இருவரும் குபேரனுடைய மக்கள். இவ்விருவரும் ஒருநாள் மதுவினை நிறைய அருந்தி ஒரு நீர்நிலையில் இறங்கி நீராடி, ஆடை இல்லாமல் கரையிலேறி நின்றனர். அவ்வழியே வந்த நாரதரைக் கண்டும் ஆடை அணிய முயலாமல் வாளாவிருந்தனர். அவர்களைக் கண்டவுடன் நாரதருக்கு மிகுந்த சினம் மூண்டது. "மரம்போல் நிற்கும் நீங்கள் மரங்களாகக் கடவீர்கள்" என்று சாபமிட்டார். அம்மொழியைக் கேட்ட அவர்கள் வருந்தித் தங்களை மன்னிக்குமாறும், அச்சாபத்தை மாற்று மாறும் வேண்டிக்கொண்டனர். அதற்கிரங்கிய நாரதர், "ஆயர் பாடியில் நீங்கள் மரமாக நில்லுங்கள். கண்ணன் உரலோடு வந்து உங்களைக்
1 பாகவதம்
|