பக்கம் எண் :

121
 

மாலுக்கு ஒருநாள், இவ்வாறே திருமாலின் ஆயுளும் கழியும். திருமாலின் ஆயுட்காலத்தின் முடிவில் உலகங்களும், உயிர்க்கூட்டங்களும் தீயால் அழிந்து எங்கும் சுடலை மயமாய்க் காட்சியளிக்கும். அப்போது பெருமான் உமைகாண திருநடனம் புரிவான். இவற்றைக் கண்ட தருமதேவதை அஞ்சிச் சிவபெருமானைச் சரண் அடைந்து துதித்து "அடியேன் இறக்கும் தன்மையை மாற்றி, தேவரீருக்கு வாகனமாகும் பேற்றையும், வலிமையையும் தந்தருள வேண்டும், என வேண்டியது. அவ்வேண்டுகோளை ஏற்று, நீ இடபவாகனமாய் நம்மிடத்தில் எப்பொழுதும் இருப்பாயாக என்று அருளிச் செய்து இடப வாகனமாக ஏற்றார். அதையறிந்த திருமாலும் பெருமான் திரிபுரத்தை எரிக்கப் புறப்பட்டுச் சென்றபொழுது இடபவாகனமாக இருந்து தாங்கினான். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

"திரியும் முப்புரந் தீம்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ்வானை" 

(தி. 7 ப. 61 பா. 3)

என்று கூறியிருத்தல் காண்க.

நெற்றிக்கண் தோற்றுவித்தது: 1

திருக்கயிலையில் பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் போது, உமாதேவியார் பெருமானின் திருக்கண்களைத் தமது இருகைகளாலும் விளையாட்டாக மூடியதால் உலகம் இருண்டது, துன்புற்றது. உலக இருளைப் போக்கிப் பெருமான் ஒளி உண்டாக்க, தமது நெற்றிக் கண்களைச் சிறிது திறந்து அருளினார். அதனால் உலகம் ஒளிபெற்றது. உய்ந்தது. இவ்வரலாற்றை,

"மலைமடந்தை விளையாடி விளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள் கண்புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுன்றான் மூடவிருள் ஓடும் வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்"

(தி. 7 ப. 16 பா. 4)

என்னும் சுந்தரர் திருவாக்கால் உணர்க.

பார்வதியின் அன்பைச் சோதித்துப் பெருமான் மணந்தது: 2

இமய மலையில் தவம் செய்துகொண்டிருந்த மலையரசன்


1. காஞ்சிப் புராணம் - திருக்கண் புதைத்த படலம

2. கந்த புராணம்