பக்கம் எண் :

173
 

ஊரைச்சொல்லி அதற்கு அண்மையில் உள்ளது என்று கூறுவது மரபாகும்.

திருவாவடுதுறைக் கோயிலிலுள்ள 'ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான்' எனத் தொடங்கும் விக்கிரம பாண்டியன் கல்வெட்டில் காணப்பெறும், துறைசையார் அகரமான இராஜேந்திரசோழச் சதுர்ப்பேதிமங்கலத்துப் பிடாகை கூத்தனூர் கொடியாலத்து விட்ட நிலம் பதிற்றுவேலியும் என்னும் கல்வெட்டுப் பகுதியால் கூத்தனூர் கொடியாலத்தில் நிலம் அளித்த செய்தி பெறப்படுகின்றது. கூத்தனூர் கொடியாலம் இவை இரண்டும் திருவாவடுதுறைக்கு வடக்கே கூமார் 4. 5 கி. மீ. தூரத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் 2 கிமீ தூரத்திற்கு மேல் இருக்கிறது. கூத்தனூர் கொடியாலம் என்றால் கூத்தனூருக்கு அருகில் உள்ள கொடியாலம் என்ற பொருளில்தான் இங்கும் அமைந்துள்ளது. 1

திருமுதுகுன்றம் கல்வெட்டில் நெற்குப்பைத் திருமுதுகுன்றம் உடையார்க்கு எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ஊரின் பெயர் நெற்குப்பை. கோயிலின் பெயர் திருமுதுகுன்றம் என்றும் பொருள் படுமா? அங்ஙனமாயின் சைவசமய குரவர்கள் "துன்னார் கடந்தையுள் தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தே" "கொள்ளிடக்கரை கோவந்த புத்தூரில் வெள்விடைக்கருள்செய் விசயமங்கை உள்ளிடத்து உறை நின்ற உருத்திரன்" என ஊரையும் கோயிலையும் குறிப்பிட்டுள்ளனரே. ஊரின் பெயர்கள் சாத்தனூர் நெற்குப்பை அங்குள்ள கோயிலின் பெயர்கள் திருவாவடுதுறை திருமுதுகுன்றம் எனக் குறிப்பிடாமைக்குக் காரணம் என்னை? வரலாற்றுப் பேராசிரியராகிய சேக்கிழார் பெருந்தகையராவது குறிப்பிட்டிருக்க வேண்டும்! அங்ஙனம் குறிப்பிடாமையால் ஊரின் பெயர் சாத்தனூர் என்பதும், அங்குள்ள கோயிலின் பெயர் திருவாவடுதுறை என்பதும் பொருத்தமுடையது ஆகாது. சாத்தனூர் திருவாவடுதுறைக்குத் தெற்கே இரண்டு மைலுக்கு மேற்பட்ட தூரத்தில் இன்றும் தனியூராக விளங்கி வருகின்றது.

திருவாவடுதுறையைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு:

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு உய்யக் கொண்டார் வளநாடாகும். இந்நாடு காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை உடையது. இது ஆக்கூர்நாடு,


1 See the South Indian Inscriptions. Volume II. Part V.