பக்கம் எண் :

233
 

கோப்பெருஞ்சிங்கன் III, வீரவிருப்பணமுடையான், வேங்கட தேவராயர், இராமப்ப நாயக்கன், ஆறனூர் இணைச்சியப்ப அகரவல்லவன், விட்டலதேவன் முதலியோராவர்.

தருமை ஆதீனத்தின் அருளாட்சியில் உள்ள திருக்கோயில்களில் இத்தலம் ஒன்றாகும்.

27. திருக்கற்குடி

இத்தலம் சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் மேற்றிசையில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

இன்று உய்யக்கொண்டான் மலையென வழங்குகிறது. நந்திவர்ம பல்லவனால் திருப்பணி செய்விக்கப்பெற்றமையின் நந்திவர்ம மங்கலம் எனக் கல்வெட்டுக்கள் வழங்குகின்றன. மேற்குநோக்கிய சந்நிதி. அம்மன் சந்நிதிகள் இரண்டு.

இறைவன் பெயர் உச்சிநாதர். முத்தீசர், கற்பகநாதர், உச்சீவ நாத சுவாமி, உய்யக்கொண்ட நாயனார், விழுமியார், ஆள்வார் விழுமிய தேவர், விழுமியநாயனார் எனக் கல்வெட்டுக்களிலும், புராணங்களிலும் வழங்கப் பெறுகின்றன. அம்மை, அஞ்சனாட்சி, தீர்த்தங்கள் பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண் கோணக் கிணறு, நாற்கோணக்கிணறு என்பன. மார்க்கண்டர் வழிபட்டு அருள் பெற்ற தலம். முனிவர்கட்குக் குருமூர்த்தியாக இருந்து பெருமான் விழுமிய நூல்களை உபதேசித்த தலம். கரனும், ஈழநாட்டரசனும் வழிபட்ட தலம். தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது.

கல்வெட்டு :

இத்தலம் இராஜராஜன் காலத்து, பாண்டிய குலாசனி வளநாட்டு ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும்1, குலோத்துங்கன் காலத்து, இராஜமகேந்திர வளநாட்டு உறையூர்க் கூற்றத்துப் பிரமதேயமான சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும்2, முதல்


1. 455 of 1908. 2. 460 of 1908,