இராஜேந்திரன் காலத்து கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்துக் கற்குடியெனவும்1, மல்லிகார்ச்சுன மகாராஜா காலத்து இராஜகம்பீர வளநாட்டுப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலையெனவும்2 வழங்கப் பெறுகின்றது. தருமம் ஆற்றிய மன்னர்கள் முதற்பராந்தகன், கண்டராதித்தன் மனைவி, பராந்தகன் மாதேவ அடிகளாராகிய செம்பியன் மாதேவியார், உத்தமசோழன், இராஜராஜன், பரகேசரி இராஜேந்திரன், வீர இராஜேந்திரன், குலோத்துங்கன், மல்லிகார்ச்சுன மகாராஜா, மயிலைத் திண்ணன் முதலியோர், இவர்கள் அளித்தன; பெரும்பாலும் விளக்கிற்காகப் பொன்னும், ஆடும் நிவேதனத்திற்கு நிலமும் ஆம். 28. திருக்காளத்தி இது சீகாளத்தி எனவும் கூறப்பெறும். சிலந்தி, பாம்பு, யானை இவை மூன்றும், வழிபட்டு வீடுபேறு அடைந்த தலம் ஆதல் பற்றி இப்பெயர் எய்திற்று என்பர். (சீ = சிலந்தி, காளம் = பாம்பு, அத்தி = யானை) பஞ்சபூத ஸ்தலங்களுள் 2 வாயுஸ்தலம். இறைவன் திருமுன்பு எரியும் பல திருவிளக்குக்களில் ஒன்று காற்றினால் மோதப் பெற்றது போல் எப்பொழுதும் அசைந்து கொண்டிருப்பதே இதற்குச் சான்றாகக் காணலாம். தென் கயிலாயத் தலங்களுள் முதன்மை பெற்றது. இறைவர் திருப்பெயர் - (1) திருக்காளத்திநாதர். (2) குடுமித் தேவர் - நாணன் என்னும் வேடனால், கண்ணப்பரிடம் கூறப் பெற்றபெயர். இறைவி திருப்பெயர் ஞானப்பூங்கோதை. இப்பெயர் "ஞானபூங்கோதையாள் பாகத்தான் காண்" என அப்பர் பெருமான் திருத்தாண்டகத்தில் வருவது காண்க. பிள்ளையார் - ஐஞ்சந்திப் பிள்ளையார். மரம் - கல்லால மரம். (விழுது இறங்காத ஆல மரமே கல் ஆலமரமாகும்) தீர்த்தம் - (1) பொன்முகலி ஆறு. இது இவ்வூரில்
1. 461 of 1908, 2. 474 of 1908. 2. பஞ்ச பூதஸ்தலங்கள் ஆவன:- திருவாரூர் - பிருதிவி (நிலம்). திருவானைக்கா - அப்பு (நீர்). திருவண்ணாமலை - தேயு (தீ). திருக்காளத்தி - வாயு (காற்று). சிதம்பரம் - ஆகாசம் (இடைவெளி.) வடசென்னை இருப்புப் பாதையில் காளத்தி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 5. கி. மீ. தூரத்தில் இருக்கிறது. தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று.
|