திருக்கோயிலின் பெயர் : இக்கோயில் வீங்குநீர்த்துருத்தியுடையார் கோயில், சொன்ன வாறறிவார்கோயில், செய்யபாதஞ்சேர்கழல்வலார் பொற்கோயில் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுவந்தது. வழிபாடு : இத் திருக்கோயிலில் சிறுகாலை, உச்சியம்போது, அந்திப்போது, அர்த்தயாமம் என்னும் நான்கு காலங்களில் வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. திருவமுது வகைகள் : வழிபாடு நடக்குங் காலங்களில் பயற்றுப் பொங்கல், (கும்மாய அமுது) பருப்பமுது, தயிரமுது ஆகிய இவைகள் பொரிக்கறியமுதுகளுடன் நிவேதிக்கப்பட்டுவந்தன. வாத்தியங்களும் பிறவும் : வழிபாடு நடக்கும் நேரங்களில் பறை ஒன்று, மத்தளம் நான்கு, சங்கு இரண்டு, காளம் இரண்டு, செகண்டிகை ஒன்று, தாளம் ஒன்று, கைம்மணி இரண்டு இவைகள் ஒலிக்கப்பெற்று வந்தன. நடனமும் இருந்துவந்தது. ஆண்டு விழா : இச் கோயிலில் வைகாசித்திங்களில் விசாகத்தில் திருவிழா நடந்துவந்தது. இச்செய்தி இதில் உடையார் சொன்னவாறறிவார் வைகாசித் திருநாள் திருவெழிச்சிக்கு வண்ணான்செய் நிலம் காலும், கும்பிடவந்து பூசித்தார். அமுதுசெய்கைக்கு நிலம் முக்காலே அரைமா அரைக்காணியும் ஆக நிலம் சந்திராதித்தவரை இறையிலியாக நாங்களே அநுபவிக்கக் கடவோமாகவும்" என்னும் விக்கிரம சோழனது எட்டாம் ஆண்டிற் செதுக்கப்பெற்ற கல்வெட்டால் பெறப்படுகின்றது. முதலாம் இராஜராஜன் கல்வெட்டிலும் இவ்விழாகுறிக்கப்
|