பக்கம் எண் :

353
 

பெற்றுள்ளது.

அம்மன் கோயிலைப்பற்றிய செய்திகள் :

சகம் 1552 இல் அதாவது கி. பி. 1630 இல் நாச்சியார்கோயில் சுற்றுமதில், உள்மதில், கோபுரம் இவைகள் பிப்பிலி சிதம்பர தீட்சிதரால் கட்டப்பெற்றுள்ளன.

பிற செய்திகள் :

இக்கோயிலுக்குக் கல்யாண ஆலயம் என்று பெயர் வைக்கப் பெற்றிருந்தது என்பதைக் கிரந்தத்தில் பொறிக்கப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இவ்வூருக்கு அருகே வடபாலுள்ள கண்டியூர் இக்கோயிற் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது, அது விக்கிரமசோழன் கல்வெட்டில் காணப்படுவதால் பழமை வாய்ந்த ஊராதல் வேண்டும்.

நாட்டின் பாகுபாடு :

இவ்வூர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் உய்யக் கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர்நாட்டில் அடங்கியிருந்தது. இவ்வளநாடு காவிரிக்கும் அரிசிலாற்றிற்றும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் இவ்வள நாட்டின் பெயர் மாற்றப்பட்டு, இராசநாராணய வளநாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. மூன்றங் குலோத்துங்கன் காலத்தில் இந்த இராச நாராயண வளநாடு சயங்கொண்டசோழவளநாடு என்னும் பெயர் பெற்றது.

கோயிலின் நிர்வாகச் சிறப்பு :

கோயில் குருக்கள் திருவாராதனை செய்யும் பிராமணர் என்றும், திருவாராதனை செய்யும் நம்பி என்றும், வழங்கப் பெற்றுள்ளனர். அவர்க்கு நாடோறும் நெல்லுப்பதக்கு நானாழியாக ஓராட்டைக்கு நெல் எழுபத்தைந்து கலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கோயில் பிராமணப்பிள்ளை திருவமுதாக்குதல், திருமஞ்சன நீரெடுத்தல், திருமெய்ப்பூச்சுத்தேய்த்தல் (சந்தனம் அரைத்தல்) விதானம் பிடித்தல் ஆகியவைகளைச் செய்து வந்தனர். அவர்க்கு நிசதம் நெல் குறுணி இருநாழியாக ஓராட்டை நாளைக்கு நாற்பத்தைங் கலங்கள் கொடுத்து வந்தனர். திருப்பள்ளித்தாமம் பறித்துத் தொடுப்பார்க்கு நிசதி நெல் குறுணி நானாழியும், திருவலகிடல்