பக்கம் எண் :

378
 

ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுத்தல் :

திருமுதுகுன்றத்திறைவரை வணங்கி "நஞ்சியிடை" என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி இறைவன்பால் பொருள் பெறும் மனக்குறிப்புடன் "மெய்யில் வெண்பொடி" எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். திருமுதுகுன்றத்திறைவர் நம்பியாரூரர்க்குப் பன்னீராயிரம் பொன்னைப் பரிசிலாக வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர் மீண்டும் இறைவனைப் பணிந்து தேவரீர் தந்தருளிய இப் பொன்னைத் திருவாரூரில் உள்ளோர் வியக்கும் வண்ணம் அங்கே வரும்படிச் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்பொழுது 'இப்பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க' என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. அம் மொழியைச் செவிமடுத்த சுந்தரர் தாம் பெற்ற பொன்னின் மாற்றறிதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார்.

தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கிக் கோயிலினுட் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தவராய் "மடத்தாடும்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப் புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுதுபரவையாருடன் இனிதிருந்தார்.

இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி "முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக" என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க்கரையில் பரவையாரை நிற்கச் செய்து தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர் தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத் துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த