பக்கம் எண் :

379
 

பெருமானே! 'பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம்பொன்னைத் தந்தருளுக' எனப் "பொன்செய்த மேனியினீர்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது. ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது. பொன்னை எடுத்த சுந்தரர் அதனையும் தாம் முன்னே மாற்றிதற்கு வெட்டி வைத்தமச்சத்தையும் உரையிட்டுப்பார்த்தார். எடுத்தபொன் உரையில் தாழ்ந்துகாணப்பட்டது. அதைக்கண்ட சுந்தரர் மீண்டும் திருப்பதிகம்பாடி மாற்றுயரப்பெற்றார். பொற்குவையைப் பரவையார் மாளிகைக்கு அனுப்பிவிட்டுப் பூங்கோயில் சென்று இறைவனை வணங்கிப் பரவையாருடன் திருமாளிகை சென்று இறையருளை எண்ணி மகிழந்துறைவாராயினார்.

இறைவன் எழுந்தருளிய ஏனையதலங்களையும் வழிபட விரும்பிய சுந்தரர். ஆரூர் இறைவன்பால் விடை பெற்று நள்ளாறு, கடவூர் வீரட்டம், திருமயானம், வலம்புரம், சாய்க்காடு, வெண்காடு, நனிபள்ளி, செம்பொன் பள்ளி, நின்றியூர், நீடூர். திருப்புன்கூர் ஆகிய தலங்களை இறைஞ்சிக்கொண்டே திருக்கோலக்காவை அடைந்தார். அப்பொழுது இறைவன் அவர்க் கெதிரே தோன்றி அருட்காட்சி வழங்கியருளினார். அவ்வருட்காட்சியைக்கண்டு வணங்கி ஞான சம்பந்தர்க்குப் பொற்றாளம் வழங்கிய சிறப்பை அமைத்துத் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

இறைவன் பொதி சோறளித்தல் :

பின்பு சீகாழிப் பதியைப் புறத்தே வலம் வந்து வணங்கித் திருஞானசம்பந்தர் திருவடிகளைப் போற்றிப் பரவிக் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கிச் செல்வாராயினார். வழியிடையே வன்றொண்டர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன் மறையவர் வடிவில் தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவந்து வேனில் வெம்மை நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பியாரூரனின் வருகையை எதிர்பார்த்திருந்தார்.

சுந்தரர் அடியார் கூட்டத்துடன் அங்கு வந்து திருவைந் தெழுத்தோதி அமர்ந்தார். மறையவர் சுந்தரரை நோக்கி 'நீர்மிகவும் பசியுடையவராகக் காணப்படுகின்றீர் யாம் கொண்டு வந்த இப்பொதி சோற்றை உண்டு இளைப்பாறுவீராக' எனக் கூறச் சுந்தரரும் அடியார்களுடன் தாமும் உண்டு உணவளித்துபசரித்த மறையவரைப் பாராட்டி அடியார்களுடன் இளைப்பாறித் துயில்கொண்டார். மறையவராய்