பக்கம் எண் :

401
 
"பித்தரை யொத்தொரு பெற்றியர் நற்றவை

யென்னைப்பெற்ற

முற்றவை தம்மனை தந்தைக்கும் தவ்வைக்கும்

தம்பிரானார்"

(தி. 7 ப. 18 பா. 7)

"ஆவணம் செய்து ஆளுங் கொண்டு"

(தி. 7 ப. 5 பா. 10)

தவநெறி வேண்டுதல் :

திருத்துறையூரில் சுந்தரா தவநெறி வேண்டிப் பதிகம் பாடினார். அத் திருப்பதிகத்திலேயே தவநெறி வேண்டும் குறிப்பைத் தெரிவித்துள்ளார்.

"துறையூர்த் தலைவா உனைவேண்டிக்கொள்வேன்
தவநெறியே"

(தி. 7 ப. 13 பா. 1 - 10)

திருவடி சூட்டப் பெறுதல் :

திருவதிகைச் சித்தவட மடத்தில் பெருமான் திருவடி சூட்டியருளிய நிலையில் பாடிய திருப்பதிகத்தில் சுந்தரர், பெருமான் திருவடி சூட்டிய அற்புதத்தைக் கூறியுள்ளார்.

"எம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்

ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்

எம்மானை யெறிகெடில வடவீரட் டானத்து

உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே"

(தி. 7 ப. 38 பா. 1)

காழிக் கடவுள் காட்சி :

சுந்தரர், சீகாழிப் பதியைத் திருவடிகளால் மிதித்தற்கஞ்சிப் புற எல்லையை வலஞ்செய்து வணங்கி நின்றாராக, காழிப் பெருமான் காட்சி வழங்கினார். அவ்வருட்காட்சியைக் கண்ட அற்புதத்தைப் பாடல் தோறும்,

"கழுமல வளநகர்க் கண்டு கொண்டேன்"

(தி. 7 ப. 58 பா. 1 - 10)