பக்கம் எண் :

400
 

"மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலியவந்தெனை
ஆண்டுகொண்டானே" 

(தி. 7 ப. 70 பா. 2)

"நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன்
தன்னை ஆட்கொண்ட சம்புவே"

(தி. 7 ப. 69 பா. 8)

"வாயாடி மாமறை யோதியோர் வேதியனாகி வந்து . . . .
வெண்ணெய் நல்லூரில் வைத்து ஆளுங்கொண்ட"

(தி. 7 ப. 17 பா. 8)

"அடக்கங்கொண் டாவணங்காட்டிநல் வெண்ணெயூர்
ஆளுங்கொண்டார்"

(தி. 7 ப. 17 பா. 10)

"வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணங்காட்டி
அடியனாவெனை ஆளது கொண்ட நற்பதத்தை"

(தி. 7 ப. 68 பா. 6)

"ஓர் ஆவணத்தால் எம்பிரானார்வெண்ணெய்நல்லூரில் வைத்
தென்னை ஆளுங் கொண்ட நம்பிரானார்" 

(தி. 7 ப. 17 பா. 5)

"அன்று வந்தெனை அகலிடத்தவர்முன் ஆளதாகஎன்றுஆவணங் காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை யொளித்தநித்திலத்திரள் தொத்தினை"

(தி. 7 ப. 62 பா. 5)

"ஒட்டியாட் கொண்டு போயொ ளித்திட்ட
உச்சிப்போதனை"

(தி. 7 ப. 59 பா. 10)

"தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர்வாழ்வுதந்தார்"

(தி. 7 ப. 17 பா. 2)

"நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார்"

(தி. 7 ப. 19 பா. 2)