இடக்கண் பெற்றது : காஞ்சிபுரத்திறைவரை வழிபட்டுச் சுந்தரர் இடக்கண் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்: "ஏலவார் குழலாள் உமைநங்கை | என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற | காலகாலனைக் கம்பன் எம்மானைக் | காணக் கண்ணடியேன் பெற்றவாறே" | (தி. 7 ப. 61 பா. 1) |
"கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண்ணடியேன் பெற்றதென்று"(தி. 7 ப. 61 பா. 11) உடற்பிணி நீங்கப் பெற்றது : திருத்துருத்தி இறைவரைப் பணிந்து திருக்குளத்தில் நீராடி உடற்பிணி,நீங்கப் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்: "கண்ணிலேன் உடம்படு நோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்" (தி. 7 ப. 10 பா. 2) "என்னுடம்படும் பிணியிடர் கெடுத்தானை" (தி. 7 ப. 74 பா. 1)
"உற்றநோய் இற்றையே அறவொழித்தானை" (தி. 7 ப. 74 பா. 5)
"தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர் வறுத்தானை" (தி. 7 ப. 74 பா. 3) வலக்கண் பெற்றது : சுந்தரர் திருவாரூரை யடைந்து இறைவனைப் பணிந்து வலக்கண் பெற்றார். இக்குறிப்பைத் தெரிவிக்கும் பகுதிகள் : விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன் குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தை யாக்கினீர்
|