பக்கம் எண் :

410
 

எற்றுக்கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக்கண் தான்தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.

(தி. 7 ப. 95 பா. 2)

"பாரூர் அறியஎன்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்"

(தி. 7 ப. 95 பா. 2)

"காணாத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே"

(தி. 7 ப. 92 பா. 8)

ஏயர்கோன் பிணி நீக்கியது :

ஏயர்கோன் கலிக்காமரை அடைந்து சுந்தரர் இறையருளால்நட்புக்கொண்டனர். அதனைக் குறிக்கும் பகுதி :

"ஏதநன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து"

(தி. 7 ப. 55 பா. 3)

மூவேந்தருடன் வழிபட்டது :

சுந்தரர், சேரமான் பெருமாளோடு மதுரை சென்று பாண்டியன், சோழன் ஆகிய மன்னர்களோடு பல தலங்களையும் வழிபட்டனர். இதனைக் குறிக்கும் பாடல்.

அடிகேளுமக் காட்செய அஞ்சுது மென்று

அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும்

படியா இவை கற்றுவல்ல அடியார

பரங்குன்றம் மேய பரமனடிக்கே

குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

குலவேந்த ராய் விண்முழு தாள்பவரே.

(தி. 7 ப. 2 பா. 11)